எவனையும் பார்க்க விடக்கூடாது!! முத்து என்கிற காட்டான் விமர்சனம்!! ப்ளூ சட்டை மாறன்..
முத்து என்கிற காட்டான்
நடிகர் விஜய் சேதுபதி நடித்து தயாரிப்பில் மார்ச் 27ல் ஜியோஹாட் ஸ்டாரில் வெளியான தொடர் தான் முத்து என்கிற காட்டான். மலையாள நடிகர் இர்ஷாத் அலி, பிரபல பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், சிங்கம்புலி, வேட்டை முத்துக்குமார், ரிஷா ஜேக்கப்ஸ், விஜே பாரு உள்ளிட்ட பல நடித்துள்ளார்கள்.

இந்த தொடருக்கு மதுநீலகண்டன் ஒளிப்பதிவில், ராஜேஷ் முருகேசன் இசையில் இயக்குநர் மணிகண்டனுடன் அஜித்குமார் இணைந்து இந்த தொடரை இயக்கியுள்ளார். இத்தொடர் வெளியாகி கலவையான விம்சனத்தை பெற்று வரும் நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தை பக்ரிந்துள்ளார்.
ப்ளூ சட்டை மாறன்
அதில், 10 எபிசோட்டுகள் கொண்ட இந்த தொடரின் ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் முதல் 3 எபிசோடுகளை மட்டும்தான் போட்டுக் காட்டினார்கள். அந்த 3 எபிசோடும் அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்றியது. ஆனால் அடுத்த 7 எபிசோட்டுகளும் ஜவ்வுமிட்டாய் போல இழுத்துவிட்டார்கள்.

7 எபிசோட்டுகளும் சுவாரசியம் இல்லாமல் போனதற்கு காரணமே படத்தில் பல காட்சிகள் தேவையே இல்லாமல் எடுத்து வைத்து சொதப்பி இருக்கிறார்கள்.
முத்து என்கிற காட்டான் வெப் தொடரின் டிரைலர் வெளியானபோது இப்படத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்று தோன்றும், ஆனால் படத்தை பார்த்தப்பின் இப்படத்தை எவனையும் பார்க்க விடக்கூடாது என்று தான் தோன்றுகிறது என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.