13 வருஷத்துக்கு முன்பே அனிருத் - காவியா திருமணத்தை எப்படி கணிச்சீங்க!! ஜோதிடர் ஜெயஸ்ரீ ஓபன்..

Anirudh Ravichander Astrology Marriage Kavya Maran
By Jai Oct 20, 2026 01:00 PM GMT
Report

அனிருத் - காவியா

அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 21 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் பிரபலங்களுக்கு பத்திரிக்கை கொடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளார் கலாநிதி மாறன்.

13 வருஷத்துக்கு முன்பே அனிருத் - காவியா திருமணத்தை எப்படி கணிச்சீங்க!! ஜோதிடர் ஜெயஸ்ரீ ஓபன்.. | Tarot Card Reader Jayashree Is Amazed Ani Kavya M

இவர்களின் காதல் திருமணத்தை 2013ல் அப்சரா ரெட்டி நிகழ்ச்சியின்போது பெண் ஜோதிடர் கணித்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. அனிருத்துக்கு காதல் திருமணம் என்றும் அவரின் வருங்கால மனைவி சினிமாத்துறையில் இருக்கமாட்டார், டெலி கம்யூனிகேஷன் வேலை செய்வார் என்றும் கூறியிருந்தார் ஜோதிடர்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியொன்றில் ஜோதிடர் ஜெயஸ்ரீ சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

ஜோதிடர் ஜெயஸ்ரீ

அதில், நட்புடன் அப்சரா தான் நான் டிவியில் கலந்து கொண்ட முதல் ஷோ. அந்நிகழ்ச்சிக்கு வந்தவர் அனிருத் என்பதை தாண்டி அவர் யார், என்ன செய்கிறார் என்று எனக்கு எதுவுமே தெரியாது. என்ன கேள்வி கேட்பார்கள் என்று தெரியாமல் சென்றேன். சும்மா தைரியமாக போ என்று என் டீச்சர் சொன்னார்.

13 வருஷத்துக்கு முன்பே அனிருத் - காவியா திருமணத்தை எப்படி கணிச்சீங்க!! ஜோதிடர் ஜெயஸ்ரீ ஓபன்.. | Tarot Card Reader Jayashree Is Amazed Ani Kavya M

குருவின் அனுகிரகம், சரஸ்வதி கடாட்சம் இருந்தால் போதும் என்பது அப்போதுதான் புரிந்தது. டாரட் கார்ட்டை படிக்கும்போது நல்ல ஃப்ளோ வந்தத். ஃப்ளோ செட்டாகிவிட்டது என்றால் கார்டு நம்மிடம் பேசும். என் கணிப்பு வீடியோ வைரலானது வியப்பாக இருக்கிறது. மேடம், நீங்கள் 13 வருஷத்துக்கு முன் சொன்ன விஷயம் அடங்கிய வீடியோ வைரலாகிவிட்டது என்று என்னிடம் ஒருவர் கூறினார் என்று ஜோதிடர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.