அஜித்தை வைத்து பயில்வானை வெச்சு செய்த ப்ளூ சட்டை? கண்டபடி திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

Ajith Kumar Bayilvan Ranganathan
By Edward Jun 27, 2022 09:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்களின் அந்தரங்க தகவல்களை படுமோசமான வார்த்தைகளை கொண்டு விமர்சித்து வருபவர் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். இதுகுறித்து பலர் எதிர்த்து விமர்சித்த வண்ணம் இருக்கிறார்கள்.

சமீபத்தில் கூட தனுஷிடம் இருந்து என்னை பற்றி பேச எவ்வளவு காசு கொடுத்தார் என்று பயில்வானை கண்டபடி திட்டியிருந்தார் பயில்வான். அப்படி பலர் பயில்வானின் பழைய தகவல்களை இணையத்தில் பகிர்ந்து கிண்டல் செய்து வந்தனர்.

இதேபோல் யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன் பங்கிற்கு பயில்வான் அஜித்தை விமர்சித்து கேட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார். உங்களுக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தொடர்பு குறைந்து வருகிறதே என்றும் எங்க வீட்டில் கூட இதுகுறித்து கேட்கிறார்கள் என்று பயில்வான் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு அஜித், பொதுவாகவே நான் தனிமையை விரும்புபவர் என்று உங்களுக்கு தெரியும், நீங்களும் என்னுடன் பல படங்களில் நடித்திருக்கிறீர்கள் உங்களே தெரியும். படங்களுக்கு பிரமோஷன் முக்கியம் தான், ஆனால் எனக்கென ஒரு தனிப்பட்ட வாழ்க்கையிருக்கிறது.

நேரம் முக்கியமானது. நேரத்தினை ரசிகர்கள் வேஸ்ட் செய்யாதீர்கள். நான் கொடுத்த பிளாப்ஸ் நிறைய. என் ரசிகர்களின் ஆதரவு தான் என்னை இந்த இடத்தினை கொண்டு வந்திருக்கிறது என்று பதில் கொடுத்தார்.

ஏற்கனவே அஜித் உடலை பற்றி ப்ளூ சட்டை விமர்சித்து கேலி செய்வது அஜித் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி வந்தது. தற்போது இந்த வீடியோவை ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ளது ஆச்சரியமாகவுள்ளது.