லேடி சூப்பர் ஸ்டார்ன்னு யாரும் கூப்பிடவில்லையே!! நயன்தாராவை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்..
லேடி சூப்பர் ஸ்டார்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. தற்போது பல படங்களில் நடித்து வரும் நயன் தாரா, நடிப்பை தாண்டி பல தொழில்களை ஆரம்பித்து சம்பாதித்து வருகிறார்.
சமீபத்தில் தன்னை இனி லேடி சூப்பர் ஸ்டார் என அழக்க வேண்டாம் என்றும் தனக்கு தன்னுடைய பெயர் தான் அடையாளம் என்பதால் நயன் தாரா என்றே அழைக்குமாறு கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன்
இதுகுறித்து பலரும் நயன் தாராவை விமர்சித்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறனும் தன் பங்கிற்கு விமர்சித்தபடியே கலாய்த்துள்ளார். அதில், படம் பார்ப்பவரக்ள் அப்படி அழைத்ததாக தெரியவில்லை, உங்கள் பட டைட்டிலிலும் மீடியாவிலும் தான் குறிப்பிடுகிறார்கள் என்று ட்விட் போட்டு கலாய்த்திருக்கிறார்.
படம் பார்ப்பவர்கள் அப்படி அழைத்ததாக தெரியவில்லை.
— Blue Sattai Maran (@tamiltalkies) March 5, 2025
உங்கள் பட டைட்டில்களிலும், மீடியாவிலும்தான் குறிப்பிடுகிறார்கள். pic.twitter.com/vlUze0KbfJ