நடிகை ஷாலினி பாண்டேவின் 2026ன் பர்ஸ்ட் போட்டோஷூட்..
ஷாலினி பாண்டே
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோயினாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ஷாலினி பாண்டே.
இப்படத்தினை தொடர்ந்து இந்தி, தெலுங்கு பட வாய்ப்பினை பெற்று நடித்து வந்த ஷாலினி தமிழில் 100 % காதல், கொரில்லா படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.

இதனையடுத்து 4 வருடங்களாக தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த ஷாலினி, நடிகர் தனுஷ் இயக்கிய இட்லி கடை படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
தற்போது ரகு கெட்டு என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி 16ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
தற்போது இந்த வருடத்தின் முதல் போட்டோஷூட்டினை எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். வெள்ளைநிற ஆடையணிந்து எடுத்த ஷாலினியின் பதிவினை பார்த்து பலரும் ஹார்ட்டின் விட்டு வருகிறார்கள்.