கொரியன் நடிகையை தொடர்ந்து அந்த பாலிவுட் நடிகைதான் வேணும்! அடம்பிடித்து வாங்கிய இயக்குநர் சங்கர்..

flim shankar Kiara Advani ram charan
By Jon Mar 26, 2021 06:46 PM GMT
Report

பிரம்மாண்ட இயக்குநர்கள் வரிசையில் தமிழ் சினிமாவில் இருப்பவர் இயக்குநர் சங்கர். வெறும் 20 படங்கள் கூட இயக்காத சங்கரின் படம் பெரிய ஹிட் கொடுத்து 100 கொடிகளுக்கு அதிகமாக வசூலில் சாதனை படைக்கும். அப்படியாக சமீபத்தில் இயக்கிய படத்தில் 35 கோடி சம்பளமாக வாங்கியதை அடுத்து தற்போது இரண்டு பிரம்மாண்ட படங்களை இயக்கவுள்ளார்.

தெலுங்கில் நடிகர் ராம் சரணை வைத்தும், பாலிவுட்டில் ரன்பீர் சிங்கை வைத்து இயக்கவுள்ளாராம். ராம் சரணின் படத்தின் கதை வேலைகளும் ப்ரொடக்‌ஷன் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அப்படத்தில் இரு கதாநாயகிகள் தேவைப்படுவதால் கொரியன் பட நடிகையும் பாப் பாடகியுமான பே சூஜி என்பவர் தான் வேண்டும் என்று ஒற்றக்காலில் நின்றிருந்தார்.

அவரை தொடர்ந்து பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை கோடிகளில் சம்பளம் பேசி முடித்துள்ளார். மேலும் சங்கரின் அடுத்த நடிகர் ரன்பீர் சிங்கின் பாலிவுட் படத்திலும் கியாரா அத்வானி தான் கமிட்டாகியுள்ளதாக பேசப்படுகிறது.