விஜய் வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்! மாசமாசம் எத்தன பேருடா இப்படி கிளம்புவீங்க..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். தம் படங்களால் சமுக கருத்துக்களை கூறுவதோடு அரசியல் பேசியும் கருத்துக்களை பேசி வருகிறார். தற்போது பீஸ்ட் படத்தில் பிஸியாக நடித்து வரும் விஜய்க்கு சமீபத்தில் உள்ளாட்சு தேர்தலில் அவரின் ரசிகர் மன்றத்தில் பெரியவெற்றியை பரிசாக கொடுத்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதையறிந்த போலிசார் உடனே விஜய்யின் நீலங்கரையில் இருக்கும் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனை முடிவில் இது புரளி என்றும் அந்த நபர் யார் என்றும் தேடுதலில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்று, அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டுவதை வழக்கமாக கொண்டவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே அஜித் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.