இப்படி ஒரு மாப்பிள்ளை இருந்தா சொல்லுங்க.. ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு மாப்பிள்ளை பார்க்கும் அப்பா
Boney Kapoor
By Parthiban.A
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் தற்போது இளைஞர்களின் கிரஷ். அவர் தற்போது ஹிந்தி படங்களில் தான் நடித்து வருகிறார்.
ஜான்வி கபூரின் அப்பா போனி கபூர் தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜான்விக்கு வரும் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என போனி கபூர் கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
ஜான்விக்கு வரும் கணவர் தன்னை விட உயரமாக இருக்க வேண்டும் என அவர் சொல்கிறாராம். போனி கபூர் ஆறு அடி 1 இன்ச் உயரம் கொண்டவர். அவரை விட உயரமான ஒருவர் தான் ஜான்விக்கு கணவராக வர வேண்டும் என சொல்வது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
