தவெக மாநாட்டுக்கு விஜய் செலவு செய்தது இத்தனை கோடியா? நடிகர் போஸ் வெங்கட் ஓப்பன் டாக்..
தவெக மாநாடு
நடிகர் விஜய் நடிப்பை தவிர்த்துவிட்டு கடைசி படத்தோடு சினிமாவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கான முழு பணிகளில் ஈடுபடவுள்ளார். அதற்காக விக்கிரவாண்டியில் வி. சாலையில் தவெக கட்சியின் முதல் மாநாட்டை திட்டமிட்டுள்ளார்.
நாளை அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவுள்ள இந்த மாநாட்டிற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் அஜித் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று ஆதரவை அளித்து வருகிறார்கள்.
போஸ் வெங்கட் ஓட்டு
இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் SIR என்ற படத்தினை இயக்கி கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தார். இப்படத்தின் பிரமோஷனுக்காக கலந்து கொண்ட போஸ் வெங்கட், தளபதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், அரசியலில் 20 வருடம் தாங்க வேண்டும் என்றால் அவர் நடித்துக்கொண்டே அரசியல் பண்ணி இருக்கலாம். நான் நடிக்கமாட்டேன் என்று சொன்னதெல்லாம் வேஸ்ட் தான். 200 கோடி சம்பளமா வாங்குறாரு, மிகச்சிறந்த நடிகர். கோட் படத்தை குடும்பத்துடன் 4 முறை பார்த்தோம்.
நாங்க யாரும் ஓட்டுப்போடமாட்டோம். ஆனால் அவரைவிட சிறந்த ஹீரோ இங்க இப்போ இல்லை. அவர் படத்துக்கு வந்துட்டாருன்னா, நல்ல படம்லாம் பார்க்கமாட்டேன். எனக்கு விஜய் சார் வந்தாபோதும். ஒரு காலத்தில் ரஜினி சாருக்கு இருந்தேன், இன்னைக்கு விஜய் சார் ஹீரோ.
மாநாட்டுக்கு 60 கோடி செலவு
அவர் ஹீரோவாக இருந்துட்டே இந்த வேலையை செய்திருக்கலாம். ஏனென்றால் அரசியலில் செலவு பண்ணனும்ல. அரசியல்ல நிக்குறது சாதாரணம் கிடையாது. கோடிக்கணக்கில் செலவாகிட்டே இருக்கும்.
மாநாடுன்னு போறாரு, 60 கோடி, 70 கோடி செலவு ஆகியிருக்கும், சும்மா எல்லாம் கிடையாது. ஒரு படத்தில் வாங்கிய 60 கோடியை இதில் போடணும். 4 மாநாடு நடத்திட்டாரு, காசு இல்லாமல் போச்சுன்னா?. ஆனால் 2026ல் அவரை நடக்கவிடமாட்டார் என்று போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.
You May Like This Video