தளபதி விஜய்னா சும்மாவா!! இலங்கை நாமல் ராஜபக்ஷ என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

Vijay Namal Rajapaksa JanaNayagan
By Edward Dec 29, 2025 01:30 PM GMT
Report

தளபதி விஜய்

மலேசியாவில் நடைபெற்ற ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு சென்னை திரும்பினார் விஜய். மலேசியாவில் இருந்து சென்னைக்கு திரும்பிய விஜய்யை பார்ப்பதற்காக விமான நிலையத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது.

தளபதி விஜய்னா சும்மாவா!! இலங்கை நாமல் ராஜபக்ஷ என்ன சொல்லி இருக்காரு தெரியுமா? | Sri Lankan Mp Namal Rajapaksa Wished Vijay

விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டார் விஜய். அவர் காரில் ஏற சென்ற போது தவறி கீழே விழுந்தார். இதை தொடர்ந்து அவர் சென்ற கார் சிறிய விபத்தில் சிக்கியது. இந்த சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாமல் ராஜபக்ஷ

இந்நிலையில், முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் அரசியல்வாதியுமான நாமல் ராஜபக்ஷ, நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

தளபதி விஜய்னா சும்மாவா!! இலங்கை நாமல் ராஜபக்ஷ என்ன சொல்லி இருக்காரு தெரியுமா? | Sri Lankan Mp Namal Rajapaksa Wished Vijay

அதில், சினிமாவில் விஜய்யின் திறமை என்னவென்று அனைவருக்கும் தெரியும். அவர் இப்போது சினிமாவில் தன்னுடைய வாழ்க்கையின் அத்தியாயத்தை முடித்துக்கொண்டு ஒரு புதிய பயணத்தை தொடங்கவுள்ளார். சினிமா அவரை இழக்கும், விஜய்யின் புதிய அரசியல் வாழ்க்கையில் அவர் வெற்றிப்பெற வாழ்த்துக்கள் என்று நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.