திருமணத்தில் டான்ஸ் ஆடிய மணப்பெண், மணமகன் செய்த செயல்! மாப்பிள்ளையே மாற்றம்
இந்த காலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைப்பது எவ்ளோ கஷ்டம் என எல்லோருக்கும் தெரியும். அதுவும் திருமணமாகாத 90ஸ் கிட்ஸ் அதை இன்னும் நன்றாகவே அறிவார்கள். ஆனால் தற்போது கடலூர் பண்ருட்டியில் திருமணத்திற்கு முந்தைய இரவு மாப்பிள்ளை மணப்பெண்ணை அறைந்துவிட்டதால் வெடித்த சண்டையில் மாப்பிள்ளையையே மாற்றிவிட்டார்கள்.
பெண்ணின் அப்பா பியூட்டி பார்லர் நடத்தி வரும் தொழிலதிபர், ஜனவரி 20ம் தேதி பண்ருட்டியில் இருக்கும் ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
ஜனவரி 19ம் தேதி இரவு மணமக்கள் அழைப்புக்கு பிறகு பெண்ணின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் டான்ஸ் ஆடி இருக்கின்றனர். அவர்கள் பெண்ணையும் அழைத்து ஆட வைத்திருக்கிறார்கள். இந்த காலத்தில் இந்த டான்ஸ் நடைமுறை தமிழ்நாட்டு திருமணங்களிலும் அதிகம் அரங்கேறி வருவது எல்லோரும் அறிந்தது தான்.
மணப்பெண் டான்ஸ் ஆடியது பற்றி மணமகன் ஆட்சேபம் தெரிவித்து சண்டை போட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்றி அவர் கன்னத்தில் அடித்துவிட்டாராம். இதனால் இந்த மாப்பிள்ளையே வேண்டாம் என பெண் முடிவெடுத்து விட்டார்.
இப்போது பெண்ணை அடிக்கும் இவர் எப்படி பெண்ணை பார்த்துக்கொள்வார் என அப்பாவும் சண்டை போட்டிருக்கிறார். பெண் முடிவில் உறுதியாக இருந்ததால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டு பெண்ணின் முறை மாப்பிள்ளையை பேசி முடித்து மறுநாள் காலை கோவிலில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.