31 வருட சினிமா வாழ்க்கை!! நளினி செஞ்ச தப்பால் வீட்டைவிட்டே ஓடிய அப்பா அண்ணன்..

Gossip Today Tamil Actress Actress
By Edward Jul 10, 2023 03:47 AM GMT
Report

தமிழ் சினிமாவில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1981ல் வெளியான படம் ராணுவ வீரன். ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படத்தில் நடிகையாக அறிமுகமாகினார் நடிகை நளினி. அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நளினி, விஜயகாந்துடன் மட்டுமே 17 படங்கள் நடித்துள்ளார்.

அதன்பின் நடிகர் ராமராஜனுடன் ஜோடியாக நடித்த நளினி அவரை காதலித்து 1987ல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 13 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

அருணா, அருண் என்ற இரு பிள்ளை இருக்கும் நளினி, ராமராஜனுடன் இன்னும் நட்புடன் வாழ்ந்தும் பிள்ளைகளை இருவரும் சேர்ந்து கவனித்தும் வருகிறார்கள். சமீபத்தில் சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியொன்றில் தன் வாழ்க்கையில் நடந்த பல விசயங்களை பகிர்ந்துள்ளார் நளினி.

அதில், தன்னுடைய அப்பா நடன ஆசிரியராக இருந்ததால் சினிமாவை பற்றி தெரிந்ததால் என்னை நடிகையாக கூடாது என்று கூறினார்.

நான் செல்லப்பெண் நான் கஷ்டப்பட கூடாது, எங்க அம்மாவுடைய ஆசையால் தான் நான் சினிமாவில் வந்தேன். என் அப்பாவும் என் பெரிய அண்ணனும் அதனால் கோவித்துக் கொண்டே வீட்டைவிட்டு போய்ட்டாங்க என்று கூறியுள்ளார்.