இளம் பெண்கள் முதல் சினிமா நடிகைகள் வரை!! காதில் 'புகடி' அணிய காரணங்கள்..

Nayanthara Trisha Janhvi Kapoor Deepika Padukone Kriti Sanon
By Jai Nov 29, 2026 05:57 AM GMT
Report

பெண்கள் தங்களின் ஆடம்பரத்திற்காகவும் அழகை கூட்டவும் காதில் கமல் உள்ளிட்ட பல அணிகளை அணிவார்கள். அப்படி காதின் மேற்பரப்பில் அணியகூடிய புகடியை பலரும் அணிவார்கள்.

இளம் பெண்கள் முதல் சினிமா நடிகைகள் வரை!! காதில்

அந்த காலத்தில் இருந்தே பாட்டிமாரள் தங்கள் காதுகளில் பல இடங்களில் கம்பல் குத்துவதை போன்று புகடியையும் குத்தும் பழக்கத்தை கொண்டிருந்தார். அதை தற்போதைய நவீனகால பெண்கள் மாடல் என்று புகடிகளை காதில் அணிந்து வருகிறார்கள். அதற்கான காரணங்கள் என்னவென்று பார்ப்போம்..

இளம் பெண்கள் முதல் சினிமா நடிகைகள் வரை!! காதில்

காதில் 'புகடி' 

தமிழகத்தில் கொப்பு என்று அழைக்கப்படும் இப்பாரம்பரிய மேல் காதணி, தற்போது புகடி என்ற பெயரில் நவீன வடிவமைப்புகளுடன் மீண்டும் டிரெண்ட்டாகி வருகிறது.

இளம் பெண்கள் முதல் சினிமா நடிகைகள் வரை!! காதில்

ஒரே காதில் பல ஆபரணங்களை அடுக்கடுக்காக அணியும் (Ear Stacking) நவீன ஃபேஷன் இளம்பெண்களிடம் பிரபலமாகி வருவதால் புகடி இதற்கு மிகச்சரியாக இருக்கும் என்று பலரும் அணிய ஆரம்பித்தனர்.

பட்டுப்புடவை, சுடிதார் போன்ற பாரம்பரிய ஆடைகளுக்கு மட்டும் முதலில் அணிய ஆரம்பித்த பெண்கள், தற்போது குர்தி, வெஸ்டர்ன் ஆடைகளுக்கும் அணிந்து வருகிறார்கள்.

தங்கத்தில் மட்டுமில்லாமல் 92.5 வெள்ளி ஆக்ஸிடைஸ்டு, குந்தன், முத்து வேலைப்பாடுகளுடன் மிகக்குறைந்த விலையில் ஆன்லைனிலும் கிடைக்கிறது.

இளம் பெண்கள் முதல் சினிமா நடிகைகள் வரை!! காதில்

காதின் மேல் ஓரத்தில் அழகாகப் பதிந்திருப்பதால், சாதாரண தோடு அணிந்தாலும் முகத்திற்கு ஒரு ராயல் மற்றும் தனித்துவமான லுக்கை கொடுக்கும்.

காதின் மேல் பகுதியிலுள்ள நரம்புப் புள்ளிகளை இது தூண்டுவதால், மன அமைதி, ஆரோக்கியத்திற்கு நல்லது என்ற பாரம்பரிய நம்பிக்கையும் இதற்கு காரணமாக இருக்கிறது.