அனுபமாவிற்கு டாட்டா! தொகுப்பாளினி சஞ்சனாவை திருமணம் செய்த கிரிக்கெட் வீரர் பும்ரா..
wedding
bumrah
anupama
sanjana
By Jon
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருபவர் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சில காரணத்திற்காக விலகினார். அதற்கு காரணம் திருமணம் செய்யப்போவதாக கூறி விடுப்பு எடுத்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், பும்ராவை திருமணம் செய்யப்போவது யார் என்ற கேள்விகள் எழுந்தது.
நடிகை அனுபமா பரமேஸ்வரரை காதலித்து வருவதாக கூறப்பட்டு கிசுகிசுக்கப்பட்டது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசன் என்பவரை மார்ச் 15ல் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

