நகைகளால் பிரபல நடிகையை மயக்கிய தொழிலதிபர்.. வலையில் சிக்கியும் அம்பலமான குடும்பவிளக்கின் ரகசியம்..
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் பிரபலமாகி முன்னணி இடத்தை பிடித்தவர் தான் அந்த அம்மணி. ஆரம்பத்தில் குடும்ப பாங்கான பெண் போல் காட்சியளித்து பின் கிளாமரில் எக்கச்சக்க தாராளத்தை வழங்கினார்.
டாப்பில் இருக்கும் அந்த நடிகை இடையில் சில சர்ச்சையிலும் சிக்கினார். ஒரு தொழிலதிபருடன் நெருக்கம் ஏற்பட்டு பார்ட்டி என்று இருந்து வந்தார். கனவுக்கன்னியாக திகழ்ந்த சமயத்தில் இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டது.

நடிகையின் அழகில் மயங்கிய தொழிலதிபர் நேரடியாகவே தன்னுடைய விருப்பத்தை கூற நடிகையோ அவரது ஆசைக்கு மறுப்பு தெரிவித்தார். விடாத தொழிலதிபர், மார்க்கெட்டில் இறங்கும் புதுபுது நகைகளை நடிகைக்கு பரிசாக அளித்து மயக்கினார்.
மேலும் தொழிலதிபரின் சாம்ராஜயத்தின் விளம்பரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இதனால் நடிகையும் அவரது வலையில் சிக்கி திருமணம் வரை சென்றிருக்கிறார்.
ஓவராக நடிகையிடம் பாசத்தில் இருந்த தொழிலதிபர் நடிப்பில் நெருக்கமாக நடிக்கக்கூடாது என்று கட்டளை போட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் சுதாரித்துக்கொண்ட நடிகை சினிமா தான் முக்கியம் என்று வேறொரு நடிகரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை பார்த்தும் ஒருசில படங்களில் அண்ணி, அக்கா கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.