நீதிபதியை பாஸ் என்று அழைத்த விஷால்.. ஆத்திரமடைந்த நீதிபதி!!
நடிகர் விஷால், தன்னுடைய படத்திற்காக, தயாரிப்பு நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியரான அன்புச் செழியனிடம் ரூ. 21.29 கோடி கடன் வாங்கினார்.
இந்த கடனை லைக்கா பட தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இந்த தொகையை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் எல்லா படங்களின் உரிமைகளையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்துக்கு தன்னிச்சையாக வெளியிடுவதாக கூறி விஷாலின் பட நிறுவனத்துக்கு எதிராக லைக்கா சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கினை விசாரணைக்காக நீதிபதி பி.டி ஆஷா தலைமையில் நேற்று ஆஜர் ஆனார் நடிகர் விஷால்.
அப்போது லைக்கா நிறுவனம் சார்பில் மூத்த. வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி ஆஜராகி லைக்கா மற்றும் விஷால் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு விஷால் இந்த ஒப்பந்தம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, என்னிடம் வெற்றுப் பேப்பரில் கையெழுத்து வாங்கி விட்டனர் என்று கூறியுள்ளார்.
இதைக்கேட்டு ஆத்திரமடைந்த நீதிபதி, இது ஒன்னும் சினிமா ஷூட்டிங் கிடையாது. நீங்க போட்ட கையெழுத்து எப்படி மற்ற முடியும். ரொம்ப புத்திசாலித்தனமா பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? என்று கூறினார்.
இதை தொடர்ந்து, நீதிபதியை பாஸ் என்று விஷால் அழைத்தார், இதனை கேட்ட நீதிபதி மேலும் கோபமடைந்து இது போன்று பாஸ் என்று கூப்பிடக்கூடாது. கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஆம், இல்லை என்று மட்டும் தான் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.
