பிக் பாஸ் தர்ஷன் மீது போலீசில் புகார்.. நீதிபதி மகனுடன் தகராறு

Bigg Boss
By Bhavya Apr 04, 2025 10:30 AM GMT
Report

 தர்ஷன்

இலங்கையை சேர்ந்த மாடல் தர்ஷன் பிக் பாஸ் தமிழில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் கூகுள் குட்டப்பா' படத்திலன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இந்நிலையில், பிக் பாஸ் தர்ஷன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் கீழ் காரை பார்க் செய்ததால் ஏற்பட்ட பிரச்சனையில் ஐகோர்ட்டு நீதிபதியின் மகனுக்கும் தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஒரு பெண் மற்றும் நீதிபதி மகன் இருவரும் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் தர்ஷன் மீது போலீசில் புகார்.. நீதிபதி மகனுடன் தகராறு | Case Filed Against Bigg Boss Dharsan

போலீசில் புகார்

இந்நிலையில், ஜெ.ஜெ.நகர் போலீசில் நீதிபதியின் மகன் புகாரளித்திருக்கிறார். அதே சமயம், தர்ஷன் தரப்பினரும் அவர்கள் மேல் எந்த தவறும் இல்லை என்று கூறி இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளனர். தற்போது, இரு தரப்பு புகார் குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.     

பிக் பாஸ் தர்ஷன் மீது போலீசில் புகார்.. நீதிபதி மகனுடன் தகராறு | Case Filed Against Bigg Boss Dharsan