போலீசார் விசாரணையில் வசமாக சிக்கிக் கொண்ட இர்பான்!.. வெளியான திடுக்கிடும் தகவல்

Tamil Cinema Youtube
By Dhiviyarajan May 28, 2023 05:30 AM GMT
Report

திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களையும் சந்தித்து அவர்களுடன் உரையாடி தன்னுடைய youtube சேனலில் பதிவிட்டு பிரபலமானவர் தான் இர்பான்.

சமீபத்தில் இவருக்கு பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதற்கு ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

போலீசார் விசாரணையில் வசமாக சிக்கிக் கொண்ட இர்பான்!.. வெளியான திடுக்கிடும் தகவல் | Case Filed Against Youtuber Irfan

இந்நிலையில் இர்பானின் கார் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஊரில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 55 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார்.

இர்பானின் காரை அவரது டிரைவர் அசாருதீன் என்பவர் ஓட்டி வந்ததாகவும் அவரால் தான் விபத்து ஏற்பட்டது என்றும் சொல்லப்பட்டது.

இன்று நடத்திய விசாரணையில் இர்பான் அந்த விபத்துக்கு உள்ளான காரில் இருந்தாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.