புது வீட்டில் முதல் ரம்ஜான் பண்டிகை!! குஷியில் VJ மணிமேகலை..
VJ மணிமேகலை
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவர் VJ மணிமேகலை. இவருக்கு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி ஷோ நல்ல வரவேற்பை மக்களிடையே ஏற்படுத்தி கொடுத்தது.
கோமாளியாக மக்களை தொடர்ந்து மகிழ்வித்து வந்த மணிமேகலை, குக் வித் கோமாளி சீசன் 5ல் தொகுப்பாளினியாக வந்தார். இதன்பின் நடந்த சில பிரச்சனைகள் காரணமாக விஜய் டிவியில் இருந்து வெளியேறினார்.
இவருடைய வெளியேற்றத்திற்கு தொகுப்பாளினி பிரியங்கா தான் காரணம் என ரசிகர்களிடையே கிசுகிசுக்கப்பட்டது. விஜய் டிவியில் இருந்து வெளியேறிய VJ மணிமேகலை ஜீ தமிழில் என்ட்ரி கொடுத்தார். டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 நிகழ்ச்சியை மிர்ச்சி விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
புது வீட்டில் முதல் ரம்ஜான்
இந்நிலையில், கடந்த கட்டி முடித்த புது வீட்டில் குடியேறினார் மணிமேகலை. தற்போது தான் கட்டிய புது வீட்டில் முதல் ரம்ஜான் பண்டிகையை தன் கணவருடன் கொண்டாடியிருக்கிறார் மணிமேகலை. கணவருடன் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது வாழ்த்தையும் பெற்று வருகிறார் மணிமேகலை.