அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. நடிகை மிர்னாலினி ரவி பளிச் பதில்
மிர்னாலினி ரவி
டிக் டாக், டப்ஸ்மாஷ், இன்ஸ்டா ரீல்ஸ் மூலமாக பாப்புலர் ஆகி நடிகர் நடிகையாக வளர்ந்தவர்கள் பலர். அப்படி இணையத்தில் அதிகம் பாப்புலர் ஆகி சினிமாவில் நடிகையாக நுழைந்தவர் தான் மிர்னாலினி ரவி.
இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலமாக நடிகை என்ற அடையாளத்தை பெற்றவர். அதற்கு பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக ரோமியோ படத்தில் நடித்திருந்தார்.
பளிச் பதில்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் மிர்னாலினி ரவியிடம் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, எனக்கு இது போன்று எந்த தொந்தரவும் வர விடாமல் நானே பாத்துக் கொள்வேன்.
எல்லாம் நம் கையில் தான் இருக்கு. நாம் இடம் கொடுக்காமல் நமக்கு யாரும் தொல்லை கொடுக்க முடியாது. பொதுவாக இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் பொருளாதார நெருக்கடியை டார்கெட் செய்துதான் வரும்.
அதில் நாம் நிறைவாக இருந்தால் அல்லது போதுமென்ற மனம் கொண்டிருந்தால் நிச்சயம் நம்மை யாரும் தொட முடியாது" என கூலாக பதிலளித்துள்ளார்.