திரிஷாவின் காதல் வலையில் சிக்கிய முக்கிய நடிகர்கள்!! மனைவியால் எஸ்கேப் ஆன தளபதி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்றும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். 40 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் திரிஷா பலருடன் காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். முக்கிய நடிகர்களுடன் நெருக்கமாக நடித்து அவர்களுடன் காதல் வதந்தியுடன் அப்படியே முடித்துக்கொண்டும் இருக்கிறார் திரிஷா. அப்படி அவரின் காதல் வலையில் விழுந்து வெளியேறிய நடிகர்களின் லிஸ்ட்டை பார்க்கலாம்.
சியான் விக்ரம்
நடிகை திரிஷாவின் கேரியலில் முக்கிய பங்கினை வகித்தவர் என்று சொன்னால் அது நடிகர் சியான் விக்ரம் தான். சாமி படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தார் திரிஷா. மேலும் பீமா படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் என்று கூறும் அளவிற்கு நெருக்கமாக இருந்தனர். அதன்பின் இருவரும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை இழந்து ஒதுங்கிவிட்டனர். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் தங்கையாக நடித்திருந்தார் திரிஷா.
விஜய்
நடிகர் விஜய்யின் ராசியான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி போன்ற படங்களில் நடித்து வந்தனர். தொடர்ந்து திரிஷாவுடன் விஜய் நடிப்பதை கவனித்த மனைவி சங்கீதா அவருடன் இனி நடிக்கவே கூடாது என்று கண்டீசன் போட்டிருக்கிறார். அதன்பின் அவர் பக்கமே செல்லாத விஜய் 14 வருடங்கள் கழித்து லியோ படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
சிம்பு
இதன்பின் நடிகர் சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த போது கிசுகிசுவில் சிக்கினார் திரிஷா. இருவரும் பொதுவெளியில் சென்று சுற்ற ஆரம்பித்ததால் அதை அப்படியே முடித்துக்கொண்டனர்.
ராணா
தெலுங்கு நடிகரான ராணாவுடன் காதலில் இருந்த திரிஷா விருதுவிழாவிற்கு ஜோடியாக வந்ததோடு, சென்னைக்கு வந்தால் திரிஷா வீட்டுக்குத்தான் போவேன் என்று மேடையிலேயே போட்டுடைத்தார். அதன்பின் சில காரணங்களால் திரிஷாவை கழட்டிவிட்டுவிட்டு வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தார் ராணா.