என் எதிர்கால நம்பிக்கை விஜய்!! தவெக கட்சியில் இணைந்த சீரியல் நடிகை உருக்கம்..

Vijay Tamil Actress Thamizhaga Vetri Kazhagam
By Edward Mar 31, 2026 07:45 AM GMT
Report

சாந்தினி பிரகாஷ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பூவே பூச்சூடாஅ சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சாந்தினி பிரகாஷ். இதனையடுத்து பல சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் சாந்தினி, சிங்கிள் பசங்க என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

என் எதிர்கால நம்பிக்கை விஜய்!! தவெக கட்சியில் இணைந்த சீரியல் நடிகை உருக்கம்.. | Chandini Prakash Officially Joined Tvk Vijay

கூமாபட்டி தங்கபாண்டியனுடம் செய்த ஆட்டம் பாட்டம் எல்லாம் இணையத்தில் பகிரப்பட்டு பேசுபொருளானது. தற்போது இருவரும் நட்பாக பழகி பல பகுதிகளுக்கு ஒன்றாக சென்று வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

தவெக

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாந்தினி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அதில், என் எதிர்காலம் என் நம்பிக்கை விஜய், மக்களுக்காக விஜய் என்ற கேப்ஷனுடன் விஜய்யின் தவெக கட்சியில் உறுப்பினராக இணைந்து, அவரின் அடையாள அட்டைப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.