சந்திரமுகி-யில் வடிவேலு பொண்டாட்டியாக நடித்த நடிகை ஸ்வர்ணாவா இது! அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ல் வெளியான படம் சந்திரமுகி. இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் பிரபு, ஜோதிகா, வடிவேலு, நயன் தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து சுமார் 900 நாட்கள் தியேட்டரில் ஒளிப்பரப்பாகி சாதனை படைத்தது.

வடிவேலுவின் மனைவி
இப்படத்தில் நடித்து அனைவரது ரோலில் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அப்படி வடிவேலுவின் மனைவியாக இப்படத்தில் ஸ்வர்ணா என்ற கதாபத்திரத்தில் நடித்தவர் நடிகை ஸ்வர்ணா மேத்யூ. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வந்த ஸ்வர்ணா சந்திரமுகி படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
ஸ்வர்ணா
இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்தும் வந்திருக்கிறார். அப்படி இளமையுடன் காணப்பட்ட ஸ்வர்ணா தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். வர்கீஸ் ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயாகியுள்ள ஸ்வர்ணாவின் சமீபத்தில் புகைப்படத்தை பார்த்து ஷாக்காகியுள்ளனர்.