சந்திரமுகி 2ம் பாகத்தின் நாயகி இவரா?- கசிந்த தகவல்
கடந்த மாதம் லைகா நிறுவனம் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்கள். அதாவது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான சந்திரமுகி 2ம் பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாக இருப்பதாக அறிவித்தார்கள்.
வடிவேலுவும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்க ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

நாயகி தேடல்
நாயகன் ராகவா லாரன்ஸ் என்ற அறிவிப்பு ஆரம்பத்திலேயே வர நாயகி யார் என்ற தகவல் மட்டும் இதுவரை வெளியாகவில்லை. த்ரிஷா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா என தொடர்ந்து சில நாயகிகளின் பெயர்கள் இடம் பெறுகிறது.
தற்போது நடிகை லட்சுமி மேனனின் பெயரும் அடிபடுகிறது, இவர் தான் கடைசியில் உறுதியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் சந்திரமுகி 2ம் பாகத்தின் நாயகி அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த முன்னணி நடிகர்.. அட, இவரா