மகனை தாழ்த்தியும் அஜித்தை உயர்த்தியும் பேசி வரும் தந்தை! அப்படி விஜய் என்ன செய்தார்?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக 80களில் கொடிக்கட்டி பறந்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். தன் படத்தின் மகன் விஜய்யை எப்படியாவது அறிமுகப்படுத்தி முன்னணி நடிகராக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார்.
இதையடுத்து விஜய்யின் உழைப்பு இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அப்பாவுக்கும் மகனுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பா அம்மா மீது விஜய் புகாரும் அளித்து கஷ்டப்படுத்தினார். இதனால் விஜய் பற்றி பல உண்மைகளை எஸ் ஏ சந்திரசேகர் யூடியூப் வழியாக கூறி வருகிறார்.
இந்நிலையில் விஜய்யை தாழ்த்தியும் நடிகர் அஜித்தை பற்றி பெருமையாக பேசியுள்ளார். அஜித்தும், விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதேபோல் அஜித்தின் மனைவி ஷாலினியும் விஜய் குடும்பத்திற்கு மிகவும் நெருங்கிய பழக்கம் உடையவர். அவரவர்கள் வீட்டிற்கு இருவரும் சென்று பழகி வந்தனர்.
ஒருமுறை அஜித் வீட்டிற்கு சென்ற ஏஸ் ஏ சியை ஷாலினி வரவேற்றப்பின் அஜித் அவர் பக்கத்தில் உட்கார்ந்து கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கும் மேல் பேசியுள்ளார். சினிமாவில் நாணயமாணவர்கள் கிடையாது யாரையும் நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கு விஜய் தந்தை, சினிமாவில் நாணயமாணவர்கள் எல்லாம் இருந்தார்கள்.
ஆனால் இப்போது யாரும் கிடையாது அது ஒரு கோல்டன் பீரியட் காலம். இப்போது உங்கள் தலைமுறையில் அப்படி யாரும் இல்லை. அஜித் சொல்வதைக் கேட்கும் போது நேர்மையாக, உண்மையாக அஜித் இருப்பதுபோல் சினிமாவில் அனைவரும் இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுவது தெரிகிறது.
இவ்வாறு அன்றைய சந்திப்பின் போது நடந்த நிகழ்வுகளை கூறியும் அதன் பின் அவரை சந்திக்கவே முடியவில்லை என்று கூறியுள்ளார்.