இரு விவாகரத்துக்கு பின் மகனுடன் தனிமையாக இருக்கும் நடிகை? ஓடி வந்து உதவும் விஷால்..
Vishal
Indian Actress
By Edward
நடிகர் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலும் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஷால், சினிமா தொழிலார்களுக்கு உதவி செய்து வருகிறார். அப்படி 48 வயதான நடிகைக்கு உதவி செய்து வருகிறாராம்.
90களில் மலையாளம் மற்றும் தமிழில் நடித்து நல்ல வரவேற்பு பெற்ற நடிகை சர்மிளா இரு திருமணங்களை செய்து விவாகரத்து பெற்று வாழ்க்கையை இழந்தவர். தற்போது சீரியலில் நடித்து வரும் சர்மிளா சமீபத்தில் தான் கஷ்டப்பட்டு வருவதை சமீபத்திய பேட்டிகளில் கூறியிருந்தார்.
இந்நிலையில் தன் மகனில் பள்ளி படிப்பில் இருந்து நடிகர் விஷால் தான் உதவி வருகிறார் என்றும் பணத்திற்காக மிகவும் கஷ்டப்பட்ட போது மருத்துவ சிகிச்சைக்கும் பணம் கொடுத்து உதவியதாகவும் கூறியுள்ளார். மகனின் 6 வருட பள்ளி ஸ்கூல் பீஸ் கூட விஷால் தான் கட்டி இருக்கிறார் என்று கூறியுள்ளார் நடிகை சர்மிளா.