சாதிய வன்மத்தை கொட்டுகிறார்கள்.. யோகிபாபுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரபலம்..
சில நாட்களுக்கு முன் நடிகர் யோகிபாபு, அஜித் தன்னை தொடக்கூடாது என்று தங்களிடம் சொன்னதாக சினிமா விமர்சகர்கள் பேசி வந்தனர்.
இணையத்தில் யோகி பாபு குறித்து பல கருத்துக்களை பலர் பகிர்ந்துவரும் நிலையில் பத்திரிக்கையாளர் சேகுவாரா அளித்த பேட்டியில் அவர்க்ள் ஓவராக பேசுகிறார்கள்.
இவர்கள் சொல்வது எல்லாம் உண்மையா? இவர்கள் எப்படி துபாய் போனார்கள், அங்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்று நான் பேசவா.

பேசினால் தாங்காது, யோகிபாபுவை ’ஈத்தரை’ என்று சொன்னதை திரும்பப்பெற வேண்டும் இல்லையென்றால் இதை நான் பெரிய அளவில் கொண்டு செல்வேன். அஜித் அப்படி சொன்னதாக இவர்கள் சொல்கிறார்களே அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. அஜித் யோகியிடம் வேறு எதற்காகவோகூட இப்படி பேசி இருக்கலாம்.
ஒரு இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு இடையில் எவ்வளவோ இருக்கும், அதை அவர்களே பேசி தீர்த்துக் கொள்வார்கள், இடையில் இவர்கள் யார், யோகிபாபு பொறுத்துக்கொள்ள முடியவில்லை அவர் மீது சாதிய வன்மத்தை கொட்டுகிறார்கள் என்று பேசியிருக்கிறார்.