சென்னையில என் பொண்ணு செலப்பிரிடீ! கல்லூரி விழா மேடையில் அடிச்சிவிட்ட பிக்பாஸ் ஜூலி!

chennai school biggboss1 julie
By Jon Mar 11, 2021 12:58 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தியை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என 4 சீசன்களை கடந்து 5 வது சீசனிற்காக காத்துகொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு சிறந்த பிளாட்பார்ம்மாக அமையும்.

அந்தவகையில் அது எதிர்மறையாக பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலிக்கு அமைந்தது. 5 செகண்ட் வீடியோவிற்காக தன் பெயரை கெடுத்துக்கொண்டு பல ஹேட்டர்ஸ்களை சம்பாதித்தார் ஜூலி. இதனால் பல வீடியோக்களை வெளியிட்டு ஜூலி புலம்பி தள்ளி இருந்தார். இந்நிலையில் ஜூலி சமீபத்தில் போட்டோஹுட் எடுத்து அதுவும் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அப்படியும் ஜூலியை கிண்டல் செய்து வந்தனர் நெட்டிசன்கள்.

ஜூலி நடித்த படங்கள் ஒன்றும் வெளியாகாமல் இருந்தாலும் அடிக்கடி கடை திறப்பு விழா, சிறப்பு விருந்தினர் என்று சென்று கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கொண்டுதான் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். அப்போது மேடையில் இவர் அப்போது என்னை திட்டிய சொந்தக்காரர்கள் அனைவரும் இப்போது நான் யார் தெரியுமா சென்னையில் மிகப்பெரிய செலிபிரிட்டி என்று கூறுகிறார்கள் என்று மேடையில் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.