900 கோடி அப்பு! இந்தை பைஃல எடுங்க முதல்வர் அய்யா! இயக்குநர் சேரன்..

tamilnadu cheran chennairains cm mk stalin
By Edward Nov 08, 2021 05:40 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த ஆட்சியை விட முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று பலரின் பாராட்டை பெற்று வருகிறது. தற்போது தமிழகத்தில் ஏற்படும் மழை நிலமையால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

முதல்வர் அவர்கள் வாக்கிங் சென்று சென்னையில் தேங்கி இருந்த இடங்களை பார்வையிட்டார். நேற்று இயக்குநர் சேரன் முதல்வர் டிவிட்டர் ஐடியை டேக் செய்து ஒரு டிவிட் செய்துள்ளது ஷாக் கொடுத்துள்ளது. கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டிக்காக சுமார் ரூ. 5000 கோடி செலவிட்டோம் என்று கணக்கு காட்டியுள்ளனர்.

அதில் தி நகர் பகுதியொன்றிற்கு மட்டும் 900 கோடி ரூபாய் செலவிடப்பட்டது என்று கூறினார்கள். ஆனால் தற்போது அந்தபகுதி வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த ஃபைல முதல்ல எடுங்க முதல்வர் அய்யா என்று கூறியுள்ளார்.