விருதுவிழாவுக்கு நடிகை ஜோதிகா அப்படி டிரெஸ் போட்டால் என்ன!! வெளுத்து வாங்கிய பிரபலம்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றெடுத்தார். இதனால் சினிமாவில் இருந்து விலகிய ஜோதிகா பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். பாலிவுட் சினிமாவில் மீண்டும் சென்றதால் ஜோதிகா, பல நிகழ்ச்சிகளுக்கு கிளாமர் ஆடையில் செல்வதை வழக்கமாக்கினார்.

சமீபத்தில் நடந்த 69வது பிலிம்பேர் விருது விழா நிகழ்ச்சிக்கு ஜோதிகா உட்பட பல நடிகைகள் படுகிளாமரில் வந்ததை பலரும் விமர்சித்தனர். குறிப்பாக சிவக்குமார் வீட்டு மருமகளான ஜோதிகா இப்படியான ஆடையணிந்து வருவது பற்றி இணையத்தில் பல விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, ஊருக்கு தகுந்தார் போல் உடையணிய வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப தான் ஜோதிகா அந்தந்த சினிமா வளையத்திற்கு ஏற்ப ஆடையணிகிறார். அதை இவ்வளவு பெரிய விஷயமாக நாம் மாற்றவேண்டிய அவசியம் இல்லை. கஜோலும் கங்கனாவும் கவர்சிக்காக ஆடை அணிந்து வந்தார்கல். அவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லையே?.

அப்படி இருக்கும் போது எதற்காக ஜோதிகாவை குறிப்பிட்டு கேட்பது என்று எனக்கு புரியவில்லை. ஜோதிகா பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். அதன்பின் தான் தமிழில் முன்னணி நடிகையாக மாறினார். அவருக்கென ஒரு கலாச்சாரம் இருக்கிறது. ஒருமுறை நான் மும்பை செல்ல விமானத்தில் பயணம் செய்தபோது சேலையில் இருந்த பெண் மும்பை அருகே வந்ததும் பாத்ரூம் சென்று கிளாமரான ஆடையணிந்து வந்ததும் எனக்கு அதிர்ச்சியானது.
அதற்கு காரணம் மும்பை அப்படியான கலாச்சாரம் கொண்டதால் ஊருக்கு தகுந்தார் போல் ஆடையணிந்து சென்றார். சென்னையில் அப்படியான ஆடையணிந்து ஜோதிகா சென்றால், நூறு கண்கள் அல்ல ஆயிரம் கண்கள் அவரை நோக்கி திரும்பும். அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி தான் ஜோதிகா நடந்து கொண்டிருக்கிறார், அது முழுக்க முழுக்க அவரின் உரிமை என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.