நியாயம் கேட்கும் முதல் மனைவி!! விவாகரத்துக்கு முன்பே சமந்தாவுடன் 2-ஆம் கணவருடன் காதலா?

Samantha Gossip Today Tamil Actress
By Edward Dec 05, 2025 12:30 PM GMT
Report

சமந்தா - ராஜ் நிடிமோரு

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவை தாண்டி இந்தி படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். நாக சைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்தப்பின் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சமீபகாலமாக தி ஃபேமிலி மேன் 2 படத்தின் இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் நெருக்கமாக பழகி ரகசிய காதலில் இருப்பதாக செய்திகள் பரவியது.

நியாயம் கேட்கும் முதல் மனைவி!! விவாகரத்துக்கு முன்பே சமந்தாவுடன் 2-ஆம் கணவருடன் காதலா? | Cheyyaru Balu Talks About Samantha Husband Ex Wife

இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்த நிலையில், டிசம்பர் 1 ஆம் தேதி சிம்பிளாக திருமணம் செய்து கொண்டனர். இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற ராஜுவின் முன்னாள் மனைவி ஸ்யாமிலிக்கு இந்த திருமணம் மன உளைச்சலை கொடுத்துள்ளது. இதனால் இணையத்தில் சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

செய்யாறு பாலு

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டியொன்றில், சமந்தா - ராஜ் திருமணம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ராஜும் அவரது முதல் மனைவியும் மியூச்சுவலாக டைவர்ஸானவர்கள் தான்.

நியாயம் கேட்கும் முதல் மனைவி!! விவாகரத்துக்கு முன்பே சமந்தாவுடன் 2-ஆம் கணவருடன் காதலா? | Cheyyaru Balu Talks About Samantha Husband Ex Wife

அவர் இப்போது என்ன சொல்கிறார் என்றால், இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பே இவர்கள் லிவிங் டூ கெதரில் இருந்தது தெரியும். சுற்றிக்கொண்டிருந்தார்கள், நான் பிரிந்துவிட்டேன். எனக்கு விவாகரத்து ஆவதற்கு முன்பே சமந்தா, ராஜுவுடன் சுற்றிக்கொண்டிருந்தார்.

சோபிதாவுடன் நாக சைதன்யா சுற்றிக்கொண்டிருந்தபோது இதெல்லாம் அடுக்குமா என்று இந்த உலகம் சொன்னது. என் கணவருடன் சமந்தா சுற்றியதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என கேட்கிறார். நாக சைதன்யா விவாகரத்தில் சமந்தாவுக்கு ஆதரவு இருந்தது. இப்போது எதிர்ப்பு அலையாக மாறி அவரை கடுமையான சொற்களை கொண்டு பேசும்படி ஆகிவிட்டது என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.