நா முத்துக்குமார் மறைவுக்கு காரணம் மதுப்பழக்கம் இல்ல, வேறொரு பழக்கம்!.குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்

Tamil Cinema Na. Muthukumar
By Dhiviyarajan Jul 13, 2023 07:30 AM GMT
Report

பிரபல பாடல் ஆசிரியர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நா முத்து குமார். இவர் கடந்த 2016 -ம் ஆண்டு உடல்நிலை குறைவால் மரணம் அடைந்தார்.

இவரின் மறைவுக்கு பின்பும் இவர் எழுதிய பாடல் வரிகள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் ஆழமாய் பதிந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் நா முத்துக்குமார் விட்டு சென்ற இடத்தை இன்றளவும் யாராலும் நிரப்ப முடியவில்லை.

நா முத்துக்குமார் மறைவுக்கு காரணம் மதுப்பழக்கம் இல்ல, வேறொரு பழக்கம்!.குண்டை தூக்கிப்போட்ட பிரபலம் | Cheyyaru Balu Truth About Na Muthukumar Death

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு நா முத்துக்குமார் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், நான் நா முத்துக்குமார் மிகவும் நல்ல மனிதர். இதுவரை யாரிடமும் கோபமாக பேசியதில்லை. சிறிய படம் பெரிய படம் என்றெல்லாம் பார்க்காமல் எல்லா படத்திற்கு வேலை செய்வார். இவரை காசு விஷயத்தில் பல பேர் ஏமாற்றி உள்ளனர்.

கவிஞன் என்றால் மது அருந்துவான், நான் முத்துக்குமார் மதுப்பழக்கத்தால் தான் உயிரிழந்ததாகக் கூறினார்கள். ஆனால் அது உண்மை இல்லை. நா முத்துக்குமார் சரியாக உடம்பை பார்த்து கொள்ளமாட்டார் . இரவும் பகலும் கடுமையாக வேலை செய்வார். இதுவே அவர் மறைவுக்கு காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.