2 தொகுதியில் வெற்றிப்பெற்ற முதலமைச்சர் விஜய்!! ராஜினாமா செய்தார்...

Chief Minister of Tamil Nadu trichy C Joseph Vijay
By Jai May 10, 2026 10:01 AM GMT
Report

முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியான நிலையில், கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து பெரும்பான்மையுடன் தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பார் என்ற அறிவுப்பு வந்ததும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

2 தொகுதியில் வெற்றிப்பெற்ற முதலமைச்சர் விஜய்!! ராஜினாமா செய்தார்... | Chief Minister Vijay Resigns As Trichy East Mla

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தவெக தலைவர் விஜய், C ஜோசப் விஜய் எனும் நான் என்று கூறி முதலமைச்சராக பதவியை ஏற்றுக்கொண்டார்.

திருச்சி கிழக்கு

முதலமைச்சரான ஜோசப் விஜய்க்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிர்ரு இரு தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றார்.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியின் எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.