இது தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் விருது அல்ல - கைதி பட சிறுமி மோனிகா

Tamil Actress Actress
By Edward Feb 01, 2026 11:45 AM GMT
Report

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் தான் கைதி. இப்படத்தில் கார்த்தியின் மகளாக குட்டி நட்சத்திரமான மோனிகா நடித்திருப்பார். தற்போது வளர்ந்து ஆளே மாறிய மோனிகா, தமிழ்நாடு ஸ்டேட் விருது குறித்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

இது தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் விருது அல்ல - கைதி பட சிறுமி மோனிகா | Child Artist Monica About Tamil Nadu State Awards

கைதி பட சிறுமி மோனிகா

அதில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப்பெற்றவர்கள், அத்தகைய அங்கீகாரத்தையளிக்கும் அளவிற்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எனக்குள் எழுந்துள்ளது. நான் எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக முன்வைக்கவில்லை.

என்னைப்போலவே பல குழந்தை நடிகர்கள் சிறப்பான ரோல்களில் நடித்து, மக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தனர். அவர்களில் யாருக்காவது இந்த விருது வழங்கப்பட்டிருந்தால், அது தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்டதாக நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். அது தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்டதாக நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்.

இது தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் விருது அல்ல - கைதி பட சிறுமி மோனிகா | Child Artist Monica About Tamil Nadu State Awards

யாரோ ஒருவரின் பரிந்துரையாலோ அல்லது செல்வாக்கினாலோ வழங்கப்படும் விருதாகவும் இல்லை. இது அரசால் வழங்கப்படும் மாநில விருது.

இந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் இத்துறை சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்வுக்குழுவினர் கவனத்தில் கொண்டு, உரிய முறையில் பரிசீலிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று மோனிகா தன்னுடைய ஆதங்கத்தை அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.