குழந்தை பெற்ற பாடகியிடம் அந்த மாதிரி பெற்றீர்களா என கேட்ட நபர்!! வெளுத்துவாங்கிய சின்மயி..

Chinmayi
1 வாரம் முன்
Parthiban.A

Parthiban.A

பாடகி சின்மயிக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. அவருக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகும் நிலையில் குழந்தை இல்லை என தொடர்ந்து கேள்விகள் வந்தது.

இந்நிலையில் தற்போது சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதால் பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஒரு சிலர் அவரிடம் 'நீங்க வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டீர்களா?' என கேள்வி கேட்டு வருகிறார்களாம். சின்மயி கர்ப்பமாக இருக்கும் போட்டோவை வெளியிடவே இல்லை என்பதால் இந்த சந்தேகம் எழுந்திருக்கிறது.

குழந்தை பெற்ற பாடகியிடம் அந்த மாதிரி பெற்றீர்களா என கேட்ட நபர்!! வெளுத்துவாங்கிய சின்மயி.. | Chinmayi Blessed With Twin Babies

அந்த கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்து இருக்கிறார் சின்மயி. "நான் கர்ப்பமாக இருக்கும் போட்டோவை வெளியிடவில்லை என்பதற்காக இப்படி கேள்வி கேட்கும் மக்களை பிடித்து இருக்கிறது. எனக்கு மிக நெருக்கமானவர் சர்க்குளுக்கு மட்டுமே அது தெரியும். "

"நான் என் சொந்த வாழ்க்கையை ரகசியமாக தான் வைத்திருப்பேன். குழந்தைகள் போட்டோவையும் இப்போதைக்கு வெளியிடமாட்டேன். தேவையென்றால் இதையும் தெரிந்துகொள்ளுங்கள்.. நான் சிசேரியன் செய்துகொள்ளும் போது பஜனை பாடினேன்" என சின்மயி கூறி இருக்கிறார்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.