நிம்மதியா இருக்க விடுடா..நான் எதாவது பண்ணிகிட்டா காரணம் அவன் தான்!! சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா...

Serials Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Apr 15, 2026 06:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் சீரியலான சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஸ்வேதா.

சமீபத்தில், தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆதி என்பவர் ஸ்வேதா குறித்து பேசி சர்ச்சையை கிளப்பினார். இதனையடுத்து ஸ்வேதாவின் கணவர் ஆதி, தன்னுடைய நகைகளை வாங்கி ஏமாற்றியதாக பிக்பாஸ் பிரபல தாமரை செல்வி புகாரளித்தும் சில வீடியோக்களில் ஆதி பற்றிய உண்மையை உடைத்தும் பேசி வருகிறார்.

நிம்மதியா இருக்க விடுடா..நான் எதாவது பண்ணிகிட்டா காரணம் அவன் தான்!! சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா... | Chinna Marumagal Serial Actress Swetha Crying

இந்நிலையில், ஆதியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அளித்துள்ள ஸ்வேதா, கண்ணீருடன் பேசி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

நடிகை ஸ்வேதா

அந்த வீடியோவில், அவ்ளோ கோவம், அவ்ளோ வலிக்குது, பைத்தியம் பிடிப்பதுபோல் இருக்கிறது, நான் ஆதி என்பவனை லவ் பண்ணேன், ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணேன், எல்லோரையும் கூப்பிட்டு வெச்சியெல்லாம் திருமணம் செய்யல, வீட்டைவிட்டு வந்துவிட்டேன். அவனுக்காக என் பெற்றோ, குடும்பம், தம்பி, நண்பர்கள் என்று எல்லோரையும் விட்டு போய்விட்டேன்.

அவன் ஒரு ஆளை நம்பி போய்விட்டேன். அதற்கு முன் நான் பிஸ்னஸ் பண்ண போறேன்னு சொல்லியும் நஷ்டமாகிவிட்டது என்று கூறி அடிக்கடி சோகமாக வருவான். அவன் பேசியதையெல்லாம் நம்பி, நான் பைத்தியக்காரன் மாதிரி போட்டிருந்த நகைகளை எல்லாம் அவனுக்கு கொடுத்துவிட்டேன்.

நிம்மதியா இருக்க விடுடா..நான் எதாவது பண்ணிகிட்டா காரணம் அவன் தான்!! சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா... | Chinna Marumagal Serial Actress Swetha Crying

இதெல்லாம் காலேஜ் படிக்கும்போதே நடந்தது. வீட்டிற்கு போய் சமாளித்தேன், உண்மை தெரிந்தப்பின் அவனை அழைத்து வீட்டில் எச்சரித்து அடித்தார்கள். நானும் அவனுக்காக அடிவாங்கினேன். அதையெல்லாம் விற்றுவிட்டேன் என்று சொன்னான். நான் காலேஜ் முதலாம் வருடம் தான் படித்துக் கொண்டிருந்தேன்.

இப்போதே நகையை வாங்கி ஏமாற்றுகிறான், அவன் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னார்கள், நான் கேட்கவில்லை. நம்மை பிரித்துவிடுவார்கள், ஒரு சைன் போட்டால் போதும் என்று சொன்னான், அதைவிட்டு நான் வாழ்க்கையில் பெரிய தப்பு செய்துவிட்டேன்.

அது பற்றி தற்போது ஒவ்வொரு நொடியும் வருத்தப்படுகிறேன். அவன் வீட்டிலும் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை, சாப்பிடமால் தூங்காமல், உடையை கூட மாற்றாமல் பல நாள் சுற்றிக்கொண்டிருந்தோம்.

நிம்மதியா இருக்க விடுடா..நான் எதாவது பண்ணிகிட்டா காரணம் அவன் தான்!! சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா... | Chinna Marumagal Serial Actress Swetha Crying

அதன்பின் அவன் வீட்டில் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவன் வேலைக்கு போகவில்லை. அங்கு அவர்கள் வீட்டில் சும்மா சாப்பிட பிடிக்கவில்லை. சென்னைக்கு போய்விடலாம் என்று கூறி அழைத்து வந்துவிட்டேன். 10ஆம் வகுப்பில் இருந்தே மாடலிங், வெப் சீரிஸ் என நடித்துக்கொண்டிருந்தேன். சென்னை வந்தப்பின் சீரியல் வாய்ப்பு வந்து சின்ன மருமகள் சீரியலில் கஷ்டப்பட்டு நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் ஒருத்தி வேலைக்கு போனாதால் தான் வீட்டைப் பார்த்துக்கொண்டேன். நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் உனக்கு தான் கொடுத்தேன். உன்மீது கேஸ் இருக்கிறது என்று சொன்னதால் அதற்காக கடன் வாங்கி செலவு செய்தேன். உன்னை லவ் பண்ணதால் தற்போது கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறேன்.

நிம்மதியா இருக்க விடுடா..நான் எதாவது பண்ணிகிட்டா காரணம் அவன் தான்!! சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா... | Chinna Marumagal Serial Actress Swetha Crying

நிம்மதியா இருக்க விடுடா

உன்னை பற்றிய உண்மை தெரிந்தப்பின் இன்னும் எத்தனை பேரை ஏமாத்திட்டு இருக்க, நீ என்ன தைரியத்துல சுத்துர, ஒருநாள் மாட்டுவன்னு தெரியாதா?. என்னை சமாதானப்படுத்தக்கூட நீ பேசவில்லை, உன் குடும்பத்தையும் அவ்ளோ நம்புனேன், நீ எல்லாம் மனுஷனே கிடையாது, பேட்டிக்கொடுத்துட்டு இருக்க, எனக்கு உன்னை புடிக்கல, இப்படியொரு கேவலமான ஜென்மம் எனக்கு தேவையில்லை.

என்ன பண்ண முடியுமோ பண்ணு, நான் பாத்துக்கிறேன். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை, எதாவது பண்ணிப்பனோன்னு இருக்கு. அப்படி சைக்கோ போல எல்லாம் செய்கிறாய், நான் மெண்ட்டலி பாதிக்கப்படுகிறேன், நீ எல்லாம் மனுஷனே கிடையாது. எனக்கு எதாவது ஆனால் அதற்கு அவன் மட்டும்தான் காரணமாக இருப்பான் என்று எல்லோருக்கும் சொல்கிறேன் என்று கண்ணீரோடு அழுது கொண்டே பேசியிருக்கிறார் ஸ்வேதா.