சிவகார்த்திகேயன் இந்த இடத்துக்கு வர இதுதான் காரணமா!! பிரபல நடிகர் கூறிய உண்மை..
சின்னத்திரையில் விஜே-வாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் பிரபலங்களை பேட்டியெடுத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெள்ளித்திரையில் தனுஷின் 3 படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
அப்படத்தினை தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது 30 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.
சமீபத்தில் இமான் - சிவகார்த்திகேயன் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், பல உண்மைகளை பல நட்சத்திரங்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை அதிர்ஷ்டம் என்று கூறலாமா என்ற ரசிகர் கேள்வி சித்ரா லட்சுமணன் பதிலளித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பொறுத்தவரையில் கடுமையான உழைப்பு இருக்கு அதுதான் அவாரது வளர்ச்சிக்கு பங்கு உண்டு என்றாலும் அதிர்ஷ்டத்துக்கும் லேசான பங்கு இருக்கு என்பதில் மறுப்பதற்கு இல்லை என்று கூறியிருக்கிறார்.