சித்ராவின் கணவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்: அதில் கூறியுள்ள பரபரப்பு தகவல்கள்

chiththu-mullai-murder
By Jon Jan 07, 2021 12:32 PM GMT
Report

சித்ரா தற்கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அவரது கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். பிரபல நடிகை சித்ரா, கடந்த மாதம் 9ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் திருமணமாகி 2 மாதங்களே ஆனதால், ஆர்டிஓ விசாரணையும் நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, நடிகர் சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கக் கூடாது எனக் கூறி, நான் சித்ரா மீது சந்தேகம் கொண்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது. என்னுடனும் எனது குடும்பத்தினரிடமும் சித்ரா அன்போடு பழகியது சித்ராவின் தாய்க்கு பிடிக்கவில்ல.

எனக்கும், சித்ராவுக்கு இடையில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை, எனவே எந்த குற்றமும் செய்யாததால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.