கட்டா குஸ்தி 2 உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Box office Gatta Kusthi 2
By Karthick Raja Jul 05, 2026 08:00 AM GMT
Report

இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் கட்டா குஸ்தி.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கட்டா குஸ்தி 2 எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

கட்டா குஸ்தி 2 உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Gatta Kusthi 2 Movie Worldwide Box Office

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கட்டா குஸ்தி 2 திரைப்படம் கடந்த 3-ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் உலகளவில் 2 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2 நாட்களில் உலகளவில் ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளது. இது பாக்ஸ் ஆபிஸில் இப்படம் செய்துள்ள சென்சேஷனல் வசூலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.