நடிகர் சியான் விகரம் படத்தை தூக்கி போட்ட அனிரூத்! விலகியதற்கு இதுதான் காரணமாம்!

movie anirudh composer vikram
By Jon Mar 27, 2021 03:03 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தற்போது வரை இளமையுடன் லட்சக்கணக்கான தென்னிந்திய ரசிகர்களை ஈர்த்து வருபவர் நடிகர் சியான் விக்ரம். உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் கலைஞராக நடிப்பிற்கு தன்னைத்தானே அர்ப்பணித்தவர் என்று பல பிரபலங்கள் கூறுவதை கேட்டிருப்பது உண்மைதான்.

அந்த அளவிற்கு அவர் படத்தில் நடிக்கும் ஈடுபாடு அதிகமாக இருக்கும். தற்போது 50 வயதை தாண்டியும் இளமையுடன் இருக்கும் விகரம் கோப்ரா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் நடித்து முடிக்கும் நிலையில் வெளியாவதற்கு காத்திருக்கிறது. மேலும் பொன்னியின் செல்வம் படத்தில் நடித்து வரும் விக்ரம் பிஸியக இருந்து வருகிறார். தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயகத்தில் விக்ரம் 60 படம் உறுதியாகியுள்ளது.

தன் மகன் துருவ் இணைந்து நடிக்கும் இப்படத்தில் நடிகை சிம்ரன் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹாவும் நடிக்கவுள்ளார். இப்படத்தின் இசையை அனிரூத்திடம் கொடுத்து அதை அறிவித்த நிலையில் அனிரூத் வேண்டாம் என்று ஒதுக்கியுள்ளார். பின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார்.

அனிரூத் விலகியதற்கு என்ன காரணம் என்று வெளியாகாமல் இருந்த நிலையில் இணையத்தில் என்ன காரணம் என்று கசிந்துள்ளது. அனிரூத் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பட வேலைகளில், பிஸியாக இருப்பதால், அவரால் சியான்-60 படத்தில் பணிபுரிய முடியவில்லை. இந்த காரணத்தை கூறியதால் தான் படக்குழு அனிரூத்தை மாற்றி சந்தோஷ நாராயணனை கமிட் செய்ததாம்.