நடிகையுடன் நெருக்கமான காட்சியில் பகவத் கீதை வசனம்!! சர்ச்சையை ஏற்படுத்திய ஓப்பன்ஹெய்மர் காட்சி..
ஹாலிவுட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருந்த இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மர் படம் நேற்று ஜூலை 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது.
இப்படம், அணுகுண்டின் தந்தை என்று கூறப்படும் ராபர்ட் ஜெ. ஓப்பன்ஹெய்பரின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியுள்ளது.
இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சர்ச்சையான காட்சியும் இடம் பெற்றுள்ளதாம். உலகங்களை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன் என்ற பகவத் கீதை வரி தான் இதற்கு காரணம்.
படத்தில் நாயகனுக்கும் நாயகிக்கும் படுக்கையறை காட்சியின் போது இந்த வரியை பயன்படுத்தியுள்ளனர்.
R ரேட்டட் படமான ஓப்பன்ஹெய்மர் படத்தில் பல காட்சிகள் இந்திய பதிப்பில் வெட்டப்பட்டு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர் சென்சார் வாரியம்.
ஆனால் அந்த நெருக்கமான காட்சியை மட்டும் ஏன் சென்சார் வாரியம் கத்தரிக்காமல் விட்டார்கள் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.