இளையராஜாவின் ஆணவம்! பெரிய மனுஷன் பண்ற வேலையா இது..

maniratnam vairamuthu arrahman spb ilaiyaraaja gangaiamaran
By Edward Feb 25, 2022 09:13 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இசைஞானியாக இருந்து வரும் இளையராஜா 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும் பல இசை கச்சேரிகளை நடத்தியும் மிகப்பெரிய இடத்தினை தொட்டார். என்னதான் அப்படியான இடத்தை தொட்டாலுமுல் சிலரை மதிக்காமல் அவமதித்து வந்தும் இருக்கிறார்கள். சிறிய பாடல் கலைஞர்கள் முதல் லிஜெண்ட் நட்சத்திரங்கள் வரை தன்னிடைய தலைக்கணத்தை காட்டியுள்ளார்.

அப்படி முதல் முதலாக தன் தம்பியிடமே காட்டியிருக்கிறார் இளையராஜா. அண்ணன் தம்பிகளாக சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் இருந்தவர்கள் இளையராஜா, கங்கை அமரன். படத்தின் ராயல்டி சம்பந்தமாக கங்கை அமரனை அவமதித்து பேசியுள்ளார். கடந்த 36 வருடங்களாக பேசாமல் இருந்து தற்போது தான் இணைந்துள்ளனர்.

அதன் பின் முதல் மரியாதை படத்தின் போது வரிகள் இடையே இளையராஜாவிற்கு கவிஞர் வைரமுத்துவிற்கு பிரச்சனை ஏற்பட்டு பல ஆண்டுகளாக பேசாமல் இருந்து வருகிறார்.

இயக்குனர் மணிரத்னத்தின் ஆரம்பகால கட்ட சினிமா படங்களில் இசையமைத்தவர் இளையராஜா. அஞ்சலி படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு பிரிவை ஏற்படுத்தியது. இதற்கு முழு காரணமே இளையராஜாவிம் சுயநலம் தானாம்.

இளையராஜாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மணிரத்னம் இளையராஜாவின் சிஷ்யபிள்ளையாக இருந்த இசைப்புயல் ஏ ஆர் ரகுமானை அறிமுகப்படுத்தி வைத்தார். இதனால் இசைஞானிக்கும் இசைப்புயலுக்கு சில மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாம்.

இளையராஜாவின் அதிகமான பாடலை பாடியவர் என்ற பெருமையை பெற்றவர் எஸ்பிபி. அவர்களின் கூட்டணிக்கென்றே தனி மார்க்கெட் இருந்து வந்தது. அதையும் ஒரு கட்டத்தில் கெடுத்து கொண்டார் இளையராஜா. ராயல்டி பெருவதில் உடன்பாடில்லை என்று இருவரும் மாறிமாறி வழக்கும் தொடுத்தனர்.

இதுவே அவர்களின் பிரிவை ஏற்படுத்தியது. இப்படி முன்னணி நட்சத்திரங்களிடையே இப்படி நடந்து கொண்டுள்ள இளையராஜா, சிறிய இயக்குனர்கள் பாடகர்கள் என பலரின் இந்த மாதிரியான ஆணவ வேலைகளை செய்துள்ளாராம்.