ஐபிஎல், உலகக் கோப்பை முதல் துரந்தர் வரை!! அதிகம் பார்த்த 10 ஓடிடி ரிலீஸ்..
2026-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், இந்தியர்கள் அதிகம் பார்த்த 10 ஓடிடி ரிலீஸ் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

10 ஓடிடி ரிலீஸ்
அந்தவகையில் கடந்த 6 மாதங்களில் இந்திய ரசிகர்கள் ஆதரவோடு சுமார் 24 மில்லியன் வியூஸ்களை பெற்று ஐசிசி அண்கள் டி20 உலகக்கோப்பை 2026ஐ ஓடிடி தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் 2026 தொடர் 228.4 மில்லியன் வியூஸ்களுடன் 2வது இடத்தினை பிடித்துள்ளது.
படங்களை தாண்டி ஒரு ரியாலிட்டி ஷோ 3வது இடத்தினை பிடித்துள்ளது. பிரபல நகைச்சுவை கலைஞர் சமய ரெய்னாவின் 'இந்தியாஸ் காட் லேட்டண்ட்' (India's Got Latent) என்கிற காமெடி நிகழ்ச்சியை யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் ஆகிய தங்களில் 38.5 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.
பாலிவுட் சினிமாவில் பிரமாண்ட படமான ரூ. 1300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த துரந்தர் படம் ஓடிடியில் 35.3 மில்லியன் வியூஸ்களை பெற்று 4வது இடத்தினை பிடித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் போதிய கிரிக்கெட் தொடரை 30.5 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. 6வது இடத்தில் துரந்தர் 2 படம் 27.8 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.
மேட் இன் இந்தியா: ஏ டைட்டன் ஸ்டோரி' என்ற தொடர் அமேசான் எம் எக்ஸ் பிளேயரில் வெளியாகி 17.8 மில்லியன் வியூஸ் பெற்று 7 வது இடத்திலும், ஜீ5 ஒடிடி தளத்தில் ஒளிப்பரப்பான ஃபிபா உலகக்கோப்பை 2026 தொடர் 17.6 மில்லியன் வியூஸ் பெற்று 8வது இடத்தை பிடித்துள்ளது.
9வது இடத்தில் 17.5 மில்லியன் வியூஸ் பெற்று தி ராஜா சாப் படம் பெற்றுள்ளது. திவ்யா தத்தா நடிப்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான சிரையா தொடர் 16.3 மில்லியன் வியூஸ் பெற்று 10வது இடத்தினை பிடித்துள்ளது.