அப்போ இதுவும் டூப்பா! எல்லாமே உண்மைன்னு நினைச்சோமே மாஸ்டர்ஜி..

master indian ghilli shootingset
By Edward Feb 04, 2022 05:40 PM GMT
Report

சினிமாவில் பெரும்பாலான படங்கள் முக்கிய இடங்களிலுக்கு சென்று அதுவும் வெளிநாட்டில் இருக்கும் சுற்றுல தளங்கள் பிரபலமான இடங்களுக்கு சென்று படப்பிடிப்பினை நடத்துவார்கள்.

அப்படி முடியவில்லை என்றால் செயற்கையாக உருவாக்கப்படும் டூப் செட் அமைத்து படப்பிடிப்பினை நடத்துவார்கள். அந்த அளவிற்கு தத்ரூபமாக உருவாக்கி உண்மை போல் காமிப்பார்கள். அப்படி ஒருசில படங்களில் என்ன வேலை செய்திருக்கார்கள் என்று பார்ப்போம்.

2005ல் இயக்குனர் வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன் தாரா நடித்து நல்ல வரவேற்பும் வசூலும் பெற்ற படம் சந்திரமுகி. அப்படத்தில் அரண்மனை உண்மையானது இல்லையாம். செட்டமைத்து உருவாக்கினார்களாம்.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெயம்ரவியின் வீடும் ஒரு செட்டிங்காம். இந்தியன் படத்தின் வீடு, விஜய்யின் கில்லி படத்தில் லைட் அவுஸ் என்பதே கிடையாதாம்.

அதுவும் செட்டமைத்து உருவாக்கப்பட்டதாம். மேலும் மாஸ்டர் படத்தில் ஜெயில், மெட்ரோ ரயில் சண்டை காட்சிகள் என செட் போட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம்.