ஒய்யா புது ரூட்டுலதான்!! பேருந்தில் மக்களோடு மக்களாக பயணம் செய்த முதல்வர், துணை முதல்வர்..
214 புதிய பேருந்து
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்து தொடங்கி வைத்தார்.
விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய அரசு போக்குவரத்து கழகங்கள், மாநில விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் சென்னையில் மாநகர போக்குவரத்து கழகங்களுக்கு தேவையான 21, 068 பேருந்துகள் வாங்க திட்டமிட்டுள்ளது.
அதன்பின் ஏப்ரல் மாத ந்லவரப்படி மாநில போக்குவரத்து கழகங்களுக்கு 3,776 புதிய பேருந்திகள் வாங்கப்பட்டன. அதன்பின் தற்போது 214 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன் இயக்கத்தை முதல்வர் இன்று துவங்கி வைத்துள்ளார். அதில் மகளிர் விடியல் பயணத்திட்டத்திற்கு 70 நகரப்பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை துவங்கி வைத்ததோடு மட்டுமில்லாமல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேருந்தில் ஏறி பேருந்தினை பார்வையிட்டு, பக்கத்தில் உட்கார்ந்த பெண்மணியிடன் கலந்துரையாடிக்கொண்டே பயணம் செய்துள்ளார்.