எல்லா கேள்விக்கு பதில் சொல்றேன்..யாரும் எந்திரிச்சு ஓடிடக்கூடாது!! சம்பவம் செய்த முதலமைச்சர் விஜய்..
மானியக் கோரிக்கை
தமிழக சட்டசபையில் செப்டம்பர் 3 ஆம் தேதி இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்ட ஒழுங்கு பிரச்சனை பற்றி பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரச்சனை குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு திசைத் திருப்பாமல் முதல்வர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன் என்று பேசினார்.

இதுகுறித்து பல விவாதங்கள் நடந்த நிலையில், முதலமைச்சர் விஜய் எழுந்து நின்று பேச தயாரானார்.
யாரும் ஓடிட கூடாது
அப்போது, அனைத்து எம் எல் ஏக்கள் கேட்கும் கேள்விகளுக்கும் திங்கள் கிழமை நான் பதிலளிப்பேன். நான் அவையில் இல்லாவிட்டாலும் எல்லா கேள்விகளும் எனக்கு வந்துவிடும், ஆனால் நான் பதிலளிக்கும்போது யாரும் எந்திரிச்சு ஓடிடக்கூடாது என்பதை பிராமிஸ் செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, உதயநிதி, சொல்லிட்டு ஓடிட்டாரா? என்று கேள்வி எழுப்பிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
ore dialogue la mudichu vitaru 😭😭😭 pic.twitter.com/jxXIhL8Uat
— Fayas.naxiim🐿️ (@_faaaz) September 3, 2026