62 வயதில் நடிகையுடன் டேட்டிங்!! கோவிந்தாவின் ஆட்டத்திற்கு செக் வைத்த மனைவி..
கோவிந்தா
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் கோவிந்தா, பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவார். அப்படி சமீபத்தில் மனைவியை பிரிந்திருக்கும் 62 வயது கோவிந்தா, 56 வயதான நடிகை கோமல் ராணியுடன் தற்போது சுற்றிக் கொண்டிருக்கும் சம்பவம் பாலிவுட்டில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கோவிந்தாவும், கோமல் ராணியும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது.

இது நடைபெறக்கூடாது என்ற எண்ணத்தில் கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹூஜா 2 ஆண்டுகளுக்கு முன் கோவிந்தாவிடமிருந்து விவாகரத்து கோரி சுனிதா அஹூஜா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை தற்போது அவர் வாபஸ் பெற்றுள்ளார்.
அவர் தரப்பு சட்ட வல்லுனர்கள், சுனிதா தன்னுடைய விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றுள்ளார். இனி சட்டத்தை மீறிய செயல்பாடுகளில் கோவிந்தா களமிறங்கினால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.