மனைவியை காப்பாத்துங்கன்னு கண்ணீர் விட்ட முத்துக்காளை!! உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்..
முத்துக்காளை
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் முத்துக்காளை வெளியிட்ட வீடியோ ஒன்றில், தன்னுடைய மனைவியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி உதவி கேட்டு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இதனால் தன் குடும்பம் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மனைவிக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். மருத்துவச் செலவுகள் மற்றும் சிகிச்சை தொடர்பான சிக்கல்களால் கவலையில் இருக்கிறேன். முதலமைச்சர் தங்களுக்கு உதவ வேண்டும் என்று உருக்கமாக பேசியிருந்தார் முத்துக்காளை.
இந்நிலையில் இந்த விஷயம் தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு செல்ல, முத்துக்காளையின் மனைவிக்கு தேவையான மேல் சிகிச்சைகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

உத்தரவிட்ட முதலமைச்சர்
இதுகுறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முத்துக்காளையிடம் தொலைபேசியில் பேச வைத்தகாவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், முதலமைச்சர் சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று முத்துக்காளையை சந்தித்து ஆறுதலளித்துள்ளார். குடும்பத்தினரை சந்தித்து உடல்நிலை குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அரசின் சார்பில் தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்றும் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.