இரவு ஷூட்டிங்கில் சியான் விக்ரம் செய்த டார்ச்சர்.. உண்மையை உடைத்த கோப்ரா பட நடிகைகள்..

Vikram Mirnalini Ravi Srinidhi Shetty Cobra
By Edward Aug 30, 2022 06:19 AM GMT
Report

தமிழ் சினிமாவில் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் முக்கிய பங்கினை வகித்து வருபவர் நடிகர் சியான் விக்ரம். சேது, பிதாமகன், ஐ, அந்நியன் உள்ளிட்ட பல படங்கள் விக்ரம் நடிப்பின் மீது எவ்வளவு அதிக ஈடுபாடும் அன்பும் வைத்திருக்கிறார் என்று தெரியும்.

அப்படி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் ஓரளவிற்கு வெற்றியை பெற்றது. இந்நிலையில் அவர் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படம் நாளை 31 ஆம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அப்படத்தில் 3 கதாநாயகிகள் விக்ரம் குறித்த சில விசயங்களை பகிர்ந்துள்ளனர். படப்பிடிப்பு சமயத்தில் விக்ரம் சுட்டித்தனமாக செய்யும் அட்ராசிட்டி மோசம் என்றும் இரவு ஷூட்டிங்கில் நாங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது தண்ணீரை முகத்தில் தெளித்து எழுப்புவார்.

மேலும் தூங்கும் போது வீடியோ எடுத்து காட்டுவார் என்றும் திடீரென உணவு தட்டுடன் சாப்பிட கூறி செல்லமாக டார்ச்சர் செய்வார் என்று கூறியுள்ளனர். விக்ரம் சக நடிகர்களை மதிக்கும் பண்புள்ளவர் என்று பலர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.