விக்ரம் படத்தின் பல கோடி நஷ்டத்தால் நடுத்தெருவுக்கு வந்த இயக்குனர்!!! கைத்தூக்கி எழுப்பிய பிரபல நடிகர்..
டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் என்று அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து டாப் இயக்குனராக திகழ்ந்தவர் இயக்குனர் ஆர் அஜய் ஞானமுத்து. இப்படத்தினை அடுத்து விக்ரம், இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி செட்டி, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கூட்டணியில் கோப்ரா என்ற படத்தினை பல கோடி பட்ஜெட்டில் இயக்கி இருந்தார்.
ஆனால் படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் அஜய் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாகினார். இதனால் துவண்டு போன போது ஆறுதலாக இருந்தவர் யார் என்ற உண்மையை சமீபத்தில் கூறியிருக்கிறார் அஜய்.
கோப்ரா படத்தினை அடுத்து டிமாண்டி காலணி 2 படத்தினை இயக்கியுள்ள அஜய் ஞானமுத்து, படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் பல விசயங்களை பகிர்ந்துள்ளார். கோப்ரா படம் வெளியாகி சரியாக போகவில்லை. அதனால் 5 நாட்கள் தூங்காமல் ரூமிலேயே இருந்தேன்.
காலை காட்சிகள் சென்ற போது அருள்நிதி, ரூமிற்கு வந்தார். சாப்பிட்டீங்களா என்று கேட்டதும் போய் சாப்பாடு வாங்க சொல்லி உதவியாளர்களை அனுப்பினார்.
இதுக்கெல்லாம் டவுன் ஆகிவிட்டால் எப்படி, வாங்க அதை தூக்கி போடுங்க, அடுத்து வேலையை பார்ப்போம் என்று கூறினார் அருள்நிதி. அப்படி என்னை கைக்கொடுத்து தூக்கி எழுப்பினார் அருள்நிதி என்று எமோஷ்னலாக பேசியிருக்கிறார் அஜய் ஞானமுத்து.